Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்த ஹாமில்டன்

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்த ஹாமில்டன்

By: Nagaraj Mon, 16 Nov 2020 09:14:19 AM

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்த ஹாமில்டன்

ஷுமேக்கரின் சாதனை சமன்... ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஹாமில்டன் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

துருக்கி இஸ்தான்புலில் நடந்த போட்டியில் ஹாமில்டன் 1 மணி 42 நிமிடம் 19.313 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். ரேசிங் பாயின்ட் வீரர் செர்ஜியோ பெரஸ் 2ஆவது இடமும், பெராரி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 3ஆவது இடமும் பிடித்தனர்.

hamilton,schumacher,record,break,equalizer ,ஹாமில்டன், ஷுமேக்கர், சாதனை, முறியடிப்பது, சமன்

94 வது சாம்பியன் பட்டத்தை வென்ற ஹாமில்டன் , 7 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

2020 சீசனில் இன்னும் 3 பந்தயங்கள் எஞ்சியுள்ளதால் ஷூமேக்கரின் சாதனையை ஹாமில்டன் முறியடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Tags :
|
|