Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா இருவரும் ஆட்டத்தையே மாற்றிவிட்டனர்

ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா இருவரும் ஆட்டத்தையே மாற்றிவிட்டனர்

By: Nagaraj Thu, 03 Dec 2020 10:11:41 PM

ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா இருவரும் ஆட்டத்தையே மாற்றிவிட்டனர்

ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம், நேற்றைய ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றிவிட்டது என்று ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
அந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய 50 ஓவர்கள் முடிவில் 302 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி. 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

allrounder,glenn maxwell,both,atom ,ஆல்ரவுண்டர், கிளென் மேக்ஸ்வெல், இருவரும், ஆட்டம்

நேற்றய ஆட்டத்தின் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளதாவது:

ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம், நேற்றைய ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றிவிட்டது. இந்திய அணி 150 ரன்கள் எடுத்திருந்தபோது, நாங்கள் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தோம். எங்களுக்கு இன்னும் 1 விக்கெட் தேவைப்பட்டது ஆட்டத்தை மொத்தமாக கையில் எடுத்துக்கொள்வதற்கு.

ஆனால், 6வது மற்றும் 7வது விக்கெட் வரிசையில் களத்தில் இறங்கி ஆடிய ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா, எங்களுக்கு அழுத்தம் கொடுத்து, ஆட்டத்தை மொத்தமாக எங்களிடமிருந்து எடுத்துக்கொண்டனர் என தெரிவித்தார்.

Tags :
|