Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடருக்காக சிறப்பான வகையில் தயாராகியிருப்பதாக ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு

ஐபிஎல் தொடருக்காக சிறப்பான வகையில் தயாராகியிருப்பதாக ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு

By: Karunakaran Wed, 16 Sept 2020 5:53:56 PM

ஐபிஎல் தொடருக்காக சிறப்பான வகையில் தயாராகியிருப்பதாக ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, முகுதுப் பகுதியில ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் உடல்தகுதி பெற்று விளையாட தயாரானார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை.

ஐபிஎல் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, ஒரு வருடம் விளையாடவில்லை என்பதால தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிறந்த முறையில் ஐபிஎல் தொடருக்கு தயாராகியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

hardik pandya,ipl series,uae,all rounder ,ஹார்டிக் பாண்ட்யா, ஐபிஎல் தொடர், யுஏஇ, ஆல் ரவுண்டர்

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில், தற்போது நான் பந்தை அடிப்பதை வைத்து பார்க்கும்போது நல்ல ஷேப் மற்றும் மனநிலையை பெற்றுள்ளேன். நான் களத்தில் இறங்கி எவ்வளவு நேரம் நிலைத்து நிற்கிறேன் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். என்னுடைய எண்ணம் சிறப்பான முறையில் வெளிப்படும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நான் எவ்வளவு தூரம் போட்டியுடன் செல்கிறேன். எவ்வளவு நாட்கள் போட்டியில் இருந்து விலகி இருக்கிறேன் என்பது விஷயம் இல்லை. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பும்போது, அது மதிப்பிற்குரியதாக இருக்க வேண்டும். நான் சிறப்பான முறையில் தயாராகி உள்ளேன். சிறப்பான விசயங்கள் முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags :
|