Advertisement

நியு சவுத்வேல்ஸ் அணி பயிற்சியாளராக ஹத்துருசிங்க நியமனம்

By: Nagaraj Mon, 20 July 2020 2:42:12 PM

நியு சவுத்வேல்ஸ் அணி பயிற்சியாளராக ஹத்துருசிங்க நியமனம்

நியு சவுத்வேல்ஸ் அணியின் பயிற்சியாளராக ஹத்துருசிங்க நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹத்துருசிங்க, அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட உதவியாளராகவும், துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

coach,new south wales,hathurusinghe,cricket team ,பயிற்சியாளர், நியூ சவுத்வேல்ஸ், ஹத்துருசிங்க, கிரிக்கெட் அணி

2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கிடையான காலப் பகுதியில் ஹத்துருசிங்க நியூ சவுத் வேல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த பதவிக்கு மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் உதவியாளர் டோபி ராட்போட், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோர் விண்ணப்பித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நியூ சவுத்வேல்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பில் ஜாக்ஸும், ஆண்ட்ரே ஆடம்ஸ் வேகப் பந்து பயிற்சியாளராகவும், அந்தோனி கிளார்க் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

Tags :
|