Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இளம் வீரரிடம் இப்படியா நடந்து கொள்வார்... ரோஹித் சர்மா ஏற்படுத்திய சர்ச்சை

இளம் வீரரிடம் இப்படியா நடந்து கொள்வார்... ரோஹித் சர்மா ஏற்படுத்திய சர்ச்சை

By: Nagaraj Thu, 08 Sept 2022 08:51:58 AM

இளம் வீரரிடம்  இப்படியா நடந்து கொள்வார்... ரோஹித் சர்மா ஏற்படுத்திய சர்ச்சை

மும்பை: சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது... நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடந்து கொண்ட விதம் சர்ச்சையாகி உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சொதப்பி வருகிறது. ஆசிய கோப்பை 2022 தொடரில் நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 173-8 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. அதன்பின் ஆடிய இலங்கை அணி 1 பந்து மீதம் இருக்கும் நிலையில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

நேற்று இந்த போட்டியில் ரோஹித் சர்மா மிகவும் கோபமாக காணப்பட்டார். அவர் பொதுவாக கேப்டன்சியில் கூலாகவே இருப்பார். மும்பை அணியின் கேப்டனாக இருந்த சமயங்களில் அவர் இதை போன்ற இக்கட்டான நேரங்களில் ஆடி இருக்கிறார். அப்போதெல்லாம் இதை விட சிறிய ஸ்கோர்களை ரோஹித் சர்மா டிபன்ட் செய்து இருக்கிறார். அப்போதெல்லாம் கடினமான நேரங்களில் கூட ரோஹித் சர்மா நல்ல முடிவுகளை எடுப்பார்.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் ஆன பின் ரோஹித் இப்படி இல்லை. அவர் அடிக்கடி கோபம் அடைகிறார். சமீபத்தில் கூட ஒரு தொடரில் புவனேஷ்வர் குமார் கேட்சை விட்டதும் ரோஹித் பந்தை காலால் உதைத்தார். அவரின் செயல் மிக மோசமான ஒன்றாக பார்க்கப்பட்டது. கடந்த பாகிஸ்தான் போட்டியிலும் ரோஹித் சர்மா கோபமாக காணப்பட்டார்.

young player,rohit,anger,controversy,sri lanka,veteran ,இளம் வீரர்,  ரோஹித், கோபம், சர்ச்சை, இலங்கை, மூத்தவீரர்

இக்கட்டான நேரத்தில் முடிவு எடுக்க முடியாமல் அவர் திணறினார். அதோடு ஓவர் ரொட்டேஷனிலும் அவர் திணறினார். நேற்று போட்டியிலும் கூட இதேபோல்தான் ரோஹித் சர்மா கோபமாக காணப்பட்டார். 15 ஓவர்கள் தாண்டியதும் இலங்கை அணி வெற்றி இலக்கை நெருங்கியது. இதனால் ரோஹித் சர்மா என்ன செய்வது என்று தெரியாமல் கோபமாக காணப்பட்டார்.


அதிலும் கடைசி ஓவரில் அர்ஷிதீப் சிங் பீல்டிங் மாற்றும்படி கேட்டார். ஆனால் ரோஹித் சர்மா கோபமாக அதை மறுத்துவிட்டார். முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு ரோஹித் சர்மா வெடுக்கென திரும்பினார். இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

இணையத்தில் பலர் இதை பகிர்ந்து வருகின்றனர். அர்ஷிதீப் சிங்கிற்கு 23 வயதுதான் ஆகிறது. அவர் மிகவும் இளம் வீரர்.கடைசி ஓவரில் கண்டிப்பாக அவர் டென்ஷனாக இருப்பார். அப்படிப்பட்ட நேரங்களில் ரோஹித் சர்மாதான் அவருக்கு நம்பிக்கை தர வேண்டும். ஆனால் மூத்த வீரர் போல், ஒரு கேப்டன் போல செயல்படாமல் ரோஹித் சர்மா கோபமாக நடந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|