Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹெட்மையர்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹெட்மையர்

By: Karunakaran Sat, 10 Oct 2020 5:28:52 PM

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹெட்மையர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக டெல்லி அணி விளையாடியபோது, டெல்லி அணியின் ஹெட்மையர் சிக்சராக விளாசினார். முதல் ஐந்து சிக்சர்களும் புல் ஷாட் மூலம் வந்தது. கிரிக்கெட் உலகில் புல் ஷாட் என்றால் நினைவுக்கு சற்றென வருபவர் ரிக்கி பாண்டிங் தான். எந்தவொரு பந்து வீச்சாளரும், எவ்வளவு வேகத்தில் பந்து வீசினாலும் ரிக்கி பாண்டிங், புல் ஷாட் அடிக்க பயப்படமாட்டார்.

தற்போது ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். இந்நிலையில் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து புல் ஷாட் கலையை கற்றுக் கொண்டிருக்கிறேன் என ஹெட் மையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹெட்மையர் கூறுகையில், ரிக்கி பாண்டிங் உடன் உலா வருவதுது வேடிக்கையாக இருக்கும். அவர் சிறந்த வீரர். என்னுடைய புல் ஷாட்டில் அவர் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

headmire,success,delhi capitals team,ipl 2020 ,தலைமையகம், வெற்றி, டெல்லி தலைநகர அணி, ஐபிஎல் 2020

மேலும் அவர், கடந்த சில போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் எனக்கு ஷார்ட் பிட்ச் பந்து வீசுவது அவர் புரிந்து வைத்துள்ளார். இதனால் என்னை புல் ஷாட் அடிக்க வைக்கும் வேலையில் களம் இறங்கி, அதை திறம்பட செய்துள்ளா். சிறந்த பினிஷர் கலையை எனக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். நான் படிப்படியாக அந்த நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் டெல்லி அணி ஒருமுறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :