Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • உடல் நலம்தான் முக்கியம்; யு.எஸ். ஓபன் போட்டியில் இருந்து விலகிய டென்னிஸ் வீராங்கனை

உடல் நலம்தான் முக்கியம்; யு.எஸ். ஓபன் போட்டியில் இருந்து விலகிய டென்னிஸ் வீராங்கனை

By: Nagaraj Tue, 18 Aug 2020 4:16:15 PM

உடல் நலம்தான் முக்கியம்; யு.எஸ். ஓபன் போட்டியில் இருந்து விலகிய டென்னிஸ் வீராங்கனை

உடல் நலம்தான் முக்கியம் என்று கூறி யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து உலகின் நெ.2 டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹெலப் விலகியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

health,simona help,u.s. open,tennis,dislocation ,உடல் நலம், சிமோனா ஹெலப், யு.எஸ். ஓபன், டென்னிஸ், விலகல்

மே 24- ஜூன் 7 தேதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக உலகின் நெ.1 வீராங்கனை ஆஷ்லி பார்டி சமீபத்தில் அறிவித்தார். பிரபல வீரர் நடாலும் இந்த வருட யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். கடந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற பியான்காவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக உலகின் நெ.2 வீராங்கனை சிமோனா ஹெலப் கூறியுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

தற்போதைய சூழலில் நியூயார்க்குக்குச் சென்று யு.எஸ். ஓபன் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். உடல் ஆரோக்கியம் தான் எப்போதும் எனக்கு முக்கியம். இதனால் ஐரோப்பாவில் தங்கி பயிற்சி பெறவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Tags :
|
|