Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹாக்கி வீரர் மன்தீப் சிங் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹாக்கி வீரர் மன்தீப் சிங் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்

By: Karunakaran Tue, 11 Aug 2020 2:17:01 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹாக்கி வீரர் மன்தீப் சிங் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விளையாட்டு போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பயிற்சி முகாம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இந்திய ஹாக்கி வீரர்களுக்கு வருகிற 20-ந்தேதியிலிருந்து பெங்களூருவில் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிக்காக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹாக்கி வீரர்கள் பெங்களூரு சென்றபோது, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மன்தீப் சிங், கேப்டன் மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஜாஸ்கரன் சிங், வருண் குமார், கோல் கீப்பர் கிருஷ்ணன் பகதுர் பதாக் ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

hockey player,mandeep singh,corona virus,hospital ,ஹாக்கி வீரர், மந்தீப் சிங், கொரோனா வைரஸ், மருத்துவமனை

இந்திய விளையாட்டு ஆணையத்தின் வளாகத்தில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்தீப் சிங்கிற்கு நேற்றிரவு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. இதனால் அவர் முதல் கட்ட அளவில் இருந்து நோயின் அடுத்தக்கட்டத்திற்கு சென்றார். உடனே எஸ்.எஸ். ஸ்ப்ராஷ் மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனை்ககு முன்னெச்சரிக்கை காரணமாக அவர் மாற்றப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதுடைய மன்தீப் சிங் 129 போட்டிகளில் விளையாடி 60 கோல்கள் அடித்துள்ளார். 2018-ம் ஆண்டு இந்திய அணி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும்போது அணியில் ஒரு நபராக அவர் இருந்துள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.


Tags :