Advertisement

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை

By: Nagaraj Wed, 08 Mar 2023 10:04:28 AM

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிக்கு செல்லும் பேருந்தில் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி ஹோலி பண்டிகையை பேருந்திற்குள் நடனமாடியும், பாடியும் கொண்டாடினர்.

வட மாநிலங்களில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலியும் ஒன்று. இந்த விழா வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா இங்கு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

bus,cricket,holi,india,players, ,இந்தியா, கிரிக்கெட், பஸ், வீரர்கள், ஹோலி

முதல் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி குஜராத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், அந்த போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியும் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறது.

பயிற்சிக்கு செல்லும் பேருந்தில் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி ஹோலி பண்டிகையை பேருந்திற்குள் நடனமாடியும், பாடியும் கொண்டாடினர். இளம் வீரர் சுப்மான் கில், கிரிக்கெட் வீரர்கள் பஸ்சில் ஹோலி கொண்டாடுவதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|