Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஜடேஜாவுக்கு காயம் எப்படி ஏற்பட்டது... விபரமறிந்ததால் பிசிசிஐ ஆத்திரம்

ஜடேஜாவுக்கு காயம் எப்படி ஏற்பட்டது... விபரமறிந்ததால் பிசிசிஐ ஆத்திரம்

By: Nagaraj Fri, 09 Sept 2022 11:32:38 PM

ஜடேஜாவுக்கு காயம் எப்படி ஏற்பட்டது... விபரமறிந்ததால் பிசிசிஐ ஆத்திரம்

மும்பை: காயம் எப்படி ஏற்பட்டது... ரவீந்திர ஜடேஜாவுக்கு உண்மையில் கிரிக்கெட் விளையாடியதால் காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதால் பிசிசிஐ ஆத்திரமடைந்துள்ளது.


ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற இந்திய அணிக்கு, சிறப்பான முடிவு கிடைக்கவில்லை. தொடர் தோல்விகளால் நாக் அவுட்டானது. இந்திய அணியின் தோல்விகளுக்கு மிக முக்கியமான காரணம் ப்ளேயிங் 11 சரியாக அமையாதது தான். ஜடேஜா இல்லாததால் வீரர்கள் வரிசை சரியாக அமையவில்லை.

ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். அதன்பின்னர் குணமடைந்து அணிக்கு திரும்பினார். ஆனால் ஆசிய கோப்பையில் அதே காயத்தில் மீண்டும் பாதிப்பு அடிப்பட்டதால், அவர் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.


காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால், ஜடேஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவருக்கு மாற்றாக எந்த வீரரை தேர்வு செய்வது என அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

bcci,players,injury,jadeja,rage,series ,பிசிசிஐ, வீரர்கள், காயம், ஜடேஜா, ஆத்திரம், தொடர்கள்

இந்நிலையில் ஜடேஜாவுக்கு கிரிக்கெட்டில் இருந்து காயம் ஏற்படவில்லை எனத்தெரியவந்துள்ளது. அணி வீரர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், அவ்வபோது, பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் முழுவதுமாக வேறு விளையாட்டுக்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். அதாவது நீச்சல் குளத்தில் விளையாடுவது, உணவருந்த செல்வது, சுற்றுலா செல்வது போன்று ஏற்பாடு செய்வார்கள்.


அந்தவகையில் ஆசிய கோப்பை தொடரின் போது, ஜடேஜா ஸ்கேட்டிங் பேடில் நின்று விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜடேஜா கீழே விழ, முன்பு காயம் ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால் காயத்தின் தன்மை தீவிரமடைந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலை உருவானது.


இந்நிலையில் இந்த சம்பவத்தால் பிசிசிஐ அதிகாரிகள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். முக்கியமான தொடர்கள் நெருங்கும் வேளைகளில் வீரர்கள் இப்படி விளையாட்டு தனமாக காயத்தை ஏற்படுத்திக்கொள்வது சரியில்லை. இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே டி20 உலகக்கோப்பை வரை வீரர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Tags :
|
|
|
|