Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியை நடத்த சேப்பாக்கம் மைதானத்துக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி ?

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியை நடத்த சேப்பாக்கம் மைதானத்துக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி ?

By: Karunakaran Fri, 11 Dec 2020 2:32:25 PM

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியை நடத்த சேப்பாக்கம் மைதானத்துக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி ?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி இலங்கையில் போட்டியை முடித்துவிட்டு, ஜனவரி 27-ந் தேதி சென்னை வருகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவில் 60 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.

சென்னை, அகமதாபாத், புனே ஆகிய நகரங்களில் மட்டுமே போட்டி நடைபெறுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம மைதானத்தில் நடக்கிறது. பிப்ரவரி 5 முதல் 9-ந் தேதி வரையிலும், பிப்ரவரி 13 முதல் 17-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இந்நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டியை நடத்த சேப்பாக்கம் மைதானத்துக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

chepauk stadium,india,england,test match ,செபாக் ஸ்டேடியம், இந்தியா, இங்கிலாந்து, டெஸ்ட் போட்டி

முதல் 2 டெஸ்ட் போட்டியை மொகாலியில் நடத்ததான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருந்தது. சேப்பாக்கம் ஆடுகளம் இந்திய பந்துவீச்சுக்கு உகந்தது என்பதால் சென்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து சென்னைக்கு வருவதுதான் மிகவும் எளிதானது. இதன் காரணமாகவும் சென்னை சேப்பாக்கம் மைதானம் முதல் 2 டெஸ்டுக்கு தேர்வு செய்யப்பட்டது.

சென்னையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஸ்டேடியத்துக்குள் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அடுத்த மாதம் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|