Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டென்னிசில் போர் ஹேண்ட் ஷாட்டை எப்படி மேம்படுத்துவது - பெடரரிடம் சச்சின் ஆலோசனை

டென்னிசில் போர் ஹேண்ட் ஷாட்டை எப்படி மேம்படுத்துவது - பெடரரிடம் சச்சின் ஆலோசனை

By: Karunakaran Sun, 05 July 2020 4:23:01 PM

டென்னிசில் போர் ஹேண்ட் ஷாட்டை எப்படி மேம்படுத்துவது - பெடரரிடம் சச்சின் ஆலோசனை

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக சச்சின் தெண்டுல்கர் திகழ்கிறார். சச்சின் தெண்டுல்கருக்கு டென்னிஸ் ஆட்டத்தின் மீது ஆர்வம் அதிகம். இதனால் ஆண்டுதோறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிப்பார்.

ஆண்டுதோறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வழக்கம் உடைய சச்சினுக்கு 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தான் மிகவும் பிடித்த டென்னிஸ் வீரர் ஆவார். இந்நிலையில் தெண்டுல்கர் தான் டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

sachin,federer,tennis,handshot ,சச்சின், பெடரர், டென்னிஸ், ஹேண்ட்ஷாட்

இந்த வீடியோ 11 வினாடி கொண்டதாகும். இதில் சச்சின் ‘போர் ஹேண்ட்’ ஷாட் அடிப்பது இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பெடரரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், போர் ஹேண்ட்’ ஷாட்டை மேம்படுத்த ஆலோசனை எதுவும் இருக்கிறதா? என்று அவரிடம் கேள்வி விடுத்துள்ளார்.

டென்னிசில் போர் ஹேண்ட் ஷாட்டை எப்படி மேம்படுத்துவது என்று சச்சின் தெண்டுல்கர் பெடரரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இருப்பினும் இந்த வீடியோவிற்கு இன்னும் பெடரர் பதில் எதுவும் அளிக்கவில்லை.

Tags :
|
|