Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ப்ளையிங் கிஸ் கொடுத்த கணவர் விராட் கோலி... அழகாக வெட்கப்பட்ட மனைவி அனுஷ்கா சர்மா

ப்ளையிங் கிஸ் கொடுத்த கணவர் விராட் கோலி... அழகாக வெட்கப்பட்ட மனைவி அனுஷ்கா சர்மா

By: Nagaraj Mon, 24 Apr 2023 6:14:42 PM

ப்ளையிங் கிஸ் கொடுத்த கணவர் விராட் கோலி... அழகாக வெட்கப்பட்ட மனைவி அனுஷ்கா சர்மா

பெங்களூர்: பறக்கும் முத்தத்தை பறக்க விட்ட விராட்கோலி... ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மாலை பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ஆட்டத்தின் முதல் பந்திலேயே போல்ட்டில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் டு பிளெசிஸ் – மேக்ஸ்வெல் இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.

anushka-sharma,flying kiss,shame,virat kohli, ,அனுஷ்கா சர்மா, பறக்கும் முத்தம், விராட் கோலி, வெட்கம்

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலே பட்லரை சிராஜ் ஆவுட்டாக்கினார். பின்னர் ஜெஸ்வால் மற்றும் படிக்கல் ஜோடி ராஜஸ்தான் அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றனர்.

13வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் பந்தை ஜேஸ்வால் லெக் சைடு தூக்கி அடித்த பந்தை கேப்டன் விராட் கோலி எந்த ஒரு சலனமின்றி எளிதாக கேட்ச் பிடித்தார். அப்போழுது மைதானத்திற்கு போட்டியை பார்க்க வந்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார்.

அதைப் பார்த்த அனுஷ்கா சர்மா வெட்கத்தில் முகம் சிவக்க, அரங்கமே ஆரவாரம் செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Tags :
|