Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்தது, எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் - ரிக்கி பாண்டிங்

ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்தது, எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் - ரிக்கி பாண்டிங்

By: Karunakaran Wed, 30 Sept 2020 5:37:43 PM

ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்தது, எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் - ரிக்கி பாண்டிங்

அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் பேர்ஸ்டோவின் அரைசதம் ஹைதராபாத் 162 ரன்கள் அடித்தது. கடுமையான பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 102 ரன்கள் எடுத்தது. பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

புவனேஷ்வர் குமார், ரஷித் கான், நடராஜன் ஆகியோரின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி கேப்பி்ட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் திணறினார்கள். இதனால் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 15 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியை பெற்றது.

hyderabad batsmen,piled up runs,defeat,ricky ponting ,ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள், ரன்கள் குவிப்பு , தோல்வி, ரிக்கி பாண்டிங்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை இழந்தது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், சீதோஷ்ண நிலை மாறுபட்டதாக நான் நினைக்கவில்லை இந்த மைதானம் மிகவும் பெரியது. பவுண்டரி எல்லை பெரியது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எங்களை முற்றிலும் துவம்சம் செய்துவிட்டனர். எங்களுடைய சூப்பர் பார்மில் இருந்து சற்று தவறி விட்டோம். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்தது சிறப்பானது என்று கூறினார்.

மேலும் அவர், எங்களது முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் 60 அல்லது 70 ரன்கள் வரை எடுத்தால் நாங்கள் நிச்சயமாக அந்த போட்டியில் வெற்றி பெறுவோம். இந்தப் போட்டியை பார்த்தீர்கள் என்றால் நாங்கள் 15 ரன்களில் மட்டுமே தோல்வியடைந்தோம். இந்த தோல்வியால் நாங்கள் யாரையும் குற்றம் கூற விரும்பவில்லை. ஒரு அணியாக தோல்வியை சந்தித்தோம் என்று தெரிவித்தார்.

Tags :
|