Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

By: Karunakaran Fri, 09 Oct 2020 08:57:33 AM

பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றதில் ஐதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதலே வார்னர்-பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரை சதம் கடந்த நிலையில் 15.1 ஓவரில் அணியின் ஸ்கோர் 160 எடுத்திருந்தது.

40 பந்தில் 1 சிக்சர் 5 பவுண்டரி உள்பட 52 குவித்த வார்னர் ஐதராபாத் அணியின் ரவி பிஷோனி பந்து வீச்சில் அவுட் ஆனார். வார்னர் அவுட் ஆன சில நிமிடங்களிலேயே 55 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உள்பட 97 ரன்கள் குவித்திருந்த பேர்ஸ்டோவ் அதே ஓவரில் ரவி பிஷோனி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அணியின் ஸ்கோர் வேகம் சற்று குறைந்தது. இறுதி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 10 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்சர் உள்பட 20 ரன்கள் குவித்தார்.

hyderabad,punjab,69 runs,ipl ,ஹைதராபாத், பஞ்சாப், 69 ரன்கள், ஐ.பி.எல்

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் 201 ரன்கள் குவித்தது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்பாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 6 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்த அகர்வால் ரன் அவுட் முறையில் வெளியேறினார். 16 பந்தில் 11 ரன்களை எடுத்த கேப்டன் கேஎல் ராகுல் அபிஷேக் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார்.

6.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 58 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய நிக்கோலஸ் பூரன் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் உள்பட 77 ரன்கள் குவித்து ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார். இறுதியில் பஞ்சாப் அணி 16.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

Tags :
|