Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்

By: Karunakaran Tue, 29 Sept 2020 07:48:56 AM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்

13-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் இன்றி நடைபெற்று இந்த போட்டியில் 8 அணிகள் மோதுகின்றன. ஐபில் திருவிழா கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சூப்பர் ஓவரிலும், சென்னை சூப்பர் கிங்சை 44 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நேர்த்தியாக உள்ளது. அந்த அணியின் பீல்டிங் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். முதலாவது ஆட்டத்தில் கையில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தற்போது குணமடைந்து விட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என தெரிகிறது.

hyderabad sunrisers,delhi capitals,ipl,cricket match ,ஹைதராபாத் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐபிஎல், கிரிக்கெட் போட்டி

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதலாவது ஆட்டத்தில் பெங்களூருவிடமும், அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடமும் தோல்வியை சந்தித்தது. ஐதராபாத் அணியின் பேட்டிங், பந்து வீச்சு இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லை. இருப்பினும், முந்தைய தோல்வியை மறந்து வெற்றிக் கணக்கை தொடங்க ஐதராபாத் அணி தீவிரம் காட்டும்.

இருப்பினும் தங்களது வெற்றியை நீட்டிக்க டெல்லி அணி நம்பிக்கையுடன் செயல்படும். வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும். இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபில் போட்டியில் அனைத்து அணிகளும் சமநிலையில் இருப்பதால், இந்த தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags :
|