Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி

சென்னை அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி

By: Karunakaran Sat, 03 Oct 2020 1:10:15 PM

சென்னை அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 14-வது ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கனர். வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.

சென்னை அணியில் தீபக் சாஹர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பின்னர் கேப்டன் டோனி மற்றும் ஜடேஜா ஜோடி சென்னை அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

hyderabad,chennai,7 runs,ipl ,ஹைதராபாத், சென்னை, 7 ரன்கள், ஐ.பி.எல்

வெற்றி பெற 8 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் கேப்டன் டோனி களத்தில் இருந்தார். பின்னர் கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், சென்னை அணியால் கடைசி ஓவரில் 20 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் டோனி 47 ரன்களுடனும், சாம் கரன் 15 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணியின் நடராஜன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags :
|