Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல் போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அதிரடி வெற்றி

ஐ.பி.எல் போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அதிரடி வெற்றி

By: Nagaraj Fri, 09 Oct 2020 09:46:45 AM

ஐ.பி.எல் போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அதிரடி வெற்றி

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் பஞ்சாப் அணி, 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது பஞ்சாப் அணிக்கு 5வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராகுலின் பஞ்சாப், வார்னரின் ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பேட்டிங் தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணிக்கு வார்னர், பேர்ஸ்டோவ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. பேர்ஸ்டோவ் ஐ.பி.எல்., அரங்கில் ஐந்தாவது அரைசதம் எட்டினார். வார்னர், தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

punjab,defeat,captain rahul,ipl,hyderabad team ,பஞ்சாப், தோல்வி, கேப்டன் ராகுல், ஐ.பி.எல், ஐதராபாத் அணி

முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது பிஷ்னாய் ஓவரில், வார்னர் (52), பேர்ஸ்டோவ் (97) அவுட்டாகினர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் (20) அவுட்டாகாமல் இருந்தார். இது இவரது 46வது ஐ.பி.எல்., அரைசதம்.

பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் (9), கேப்டன் ராகுல் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. அப்துல் சமத் வீசிய போட்டியின் 9வது ஓவரில் 4 சிக்சர் உட்பட 28 ரன்கள் எடுத்த பூரன், 17 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 77 ரன் எடுத்தார். ராகுல் (11), மேக்ஸ்வெல் (7), மன்தீப் சிங் (6) கைவிட்டனர். பஞ்சாப் அணி 16.5 ஓவரில் 132 ரன்னுக்கு சுருண்டு, வீழ்ந்தது. 6 போட்டிகளில் பஞ்சாப் அடைந்த ஐந்தாவது தோல்வி இது.

Tags :
|
|
|