Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற பசியில் இருக்கிறேன் - ஜேம்ஸ் ஆண்டர்சன்

விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற பசியில் இருக்கிறேன் - ஜேம்ஸ் ஆண்டர்சன்

By: Karunakaran Tue, 11 Aug 2020 1:56:30 PM

விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற பசியில் இருக்கிறேன் - ஜேம்ஸ் ஆண்டர்சன்

500 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்த இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன் ஆவார். இங்கிலாந்து மண்ணில் புதிய பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தற்போது 38 வயதாகிறது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 590 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கொரோனாவிற்கு பின் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 டெஸ்ட், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்டில் ஆடியபோது அதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

hungry,wicket,james anderson,england player ,பசி, விக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து வீரர்

இந்நிலையில் அவரிடம் ஓய்வு குறித்து கேட்டபோது அதற்கு அவர், என்னால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ, அதுவரை விளையாட விரும்புகிறேன். இந்த வாரம் நான் செய்ததைப் போலவே நான் பந்துவீசினால், ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு என் கைகளில் இருந்து பறிக்கப்பட்டுவிடும். இந்த வாரத்தில் ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதால் ஓய்வு பற்றி பேசுவது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியதாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், கடைசி 10 வருடத்தில் முதன்முறையாக மைதானத்தில் நான் சற்று எமோசனல் ஆகிவிட்டேன். விரக்கியடைந்தேன். இது என்னுடைய கிரிக்கெட் கேரியரில் கடினமான நேரம் என்று நினைக்கவில்லை. எனது வாழ்க்கையில் இன்னொரு மோசமான விளையாட்டு இருக்கும் என்று நம்புகிறேன். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தீராத பசியில் உள்ளேன். 600 விக்கெட் வீழ்த்தினால் மிகச்சிறப்பு. அந்த சாதனையை எட்ட முடியவில்லை என்றால் கிடைத்ததை வைத்து சந்தோசம் அடைவேன் என்று கூறினார்.

Tags :
|
|