Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • முதல் போட்டியிலேயே இப்படி ஃபார்முக்கு வருவேன் என நினைக்கவில்லை - ஏபி டி வில்லியர்ஸ்

முதல் போட்டியிலேயே இப்படி ஃபார்முக்கு வருவேன் என நினைக்கவில்லை - ஏபி டி வில்லியர்ஸ்

By: Karunakaran Tue, 22 Sept 2020 2:41:21 PM

முதல் போட்டியிலேயே இப்படி ஃபார்முக்கு வருவேன் என நினைக்கவில்லை - ஏபி டி வில்லியர்ஸ்

13-வது ஐபிஎல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி 30 பந்தில் 51 ரன்கள் சேர்த்ததால் ஆர்சிபி அணியால் 163 ரன்கள் சேர்க்க முடிந்தது.

பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. இறுதியில், ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கி உள்ளது.

ipl,first match,ab de villiers,rcb ,ஐபிஎல், முதல் போட்டி, ஏபி டிவில்லியர்ஸ், ஆர்சிபி

முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில், உண்மையை சொல்லப்போனால் எனக்கு நானே ஆச்சர்யப்பட்டுக் கொண்டேன். நாங்கள் தென்ஆப்பிரிக்காவில் போட்டி விளையாட்டில் ஆடியது சிறப்பான விசயம். நான் இங்கு வரும்போது கொஞ்சம் நம்பிக்கைதான் இருந்தது. இந்த நேரத்தில் முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடியது எனக்கு முக்கியமான விசயம். இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான திறமையான வீர்ர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களும் உள்ளனர் என்று கூறினார்.

மேலும் அவர், இங்கு வருவதற்கு முன் அதிகமாக போட்டிகளில் விளையாடவில்லை என்பதால், உங்களுக்குள்ளேயே அதிக சந்தேகம் இருக்கும். அணியுடன் இணைந்து கடந்த நான்கு வாரங்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டு, தனக்குத்தானே சிறந்த பார்மை பெற்றுள்ளேன். மகிழ்ச்சியான தொடக்கம் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக கடைசி நேரத்தில் ரன்அவுட் ஆகிவிட்டேன் என்று தெரிவித்தார்.


Tags :
|