Advertisement

தோனியை கேப்டனாக அறிவிக்க பரிந்துரைத்தேன்; சச்சின் தகவல்

By: Nagaraj Wed, 19 Aug 2020 7:05:29 PM

தோனியை கேப்டனாக அறிவிக்க பரிந்துரைத்தேன்; சச்சின் தகவல்

நானும் பரிந்துரை செய்தேன்... மகேந்திர சிங் தோனியை இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்க தானும் பிசிசிஐ-யிடம் பரிந்துரை செய்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக கங்குலி, டிராவிட், சச்சின் ஆகியோர் இணைந்து இளம் காளை போன்று துடிப்பான வீரரிடம் தலைமையை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

dhoni,sachin,innal players,bcci,recommended ,தோனி, சச்சின், இன்னாள் வீரர்கள், பிசிசிஐ, பரிந்துரை

அப்போது பிசிசிஐ தன்னுடைய விருப்பத்தைக் கேட்ட போது தோனியின் பெயரைக் கூறியதாக சச்சின் தெரிவித்துள்ளார். FIRST SLIP இல் தோனியின் அருகில் நின்று போட்டியை அவர் எவ்வாறு கணிக்கிறார், ஃபீல்டு செட்டிங், முடிவு எடுத்தலில் அவரது அணுகுமுறை உள்ளிட்டவை கவனித்து பார்த்த போது தான் நன்கு திருப்தி அடைந்ததால் பிசிசிஐ யிடம் அவரது பெயரை பரிந்துரைத்ததாக சச்சின் கூறியுள்ளார்.

தோனி ஓய்வு பெற்றதில் இருந்தே அவர் மீதான பாசத்தை முன்னாள், இன்னாள் வீரர்கள் உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
|
|
|