Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • விரைவாக ஆட்டமிழந்ததற்கு நானே பொறுப்பேற்கிறேன்; வார்னர் தகவல்

விரைவாக ஆட்டமிழந்ததற்கு நானே பொறுப்பேற்கிறேன்; வார்னர் தகவல்

By: Nagaraj Sun, 27 Sept 2020 4:43:03 PM

விரைவாக ஆட்டமிழந்ததற்கு நானே பொறுப்பேற்கிறேன்; வார்னர் தகவல்

நானே பொறுப்பேற்கிறேன்... கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முழு ஓவர்களையும் பேட் செய்யாமல் விரைவாக ஆட்டமிழந்ததற்கு நானே பொறுப்பேற்கிறேன். யாரையும் குறைகூறவில்லை என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கேகேஆர் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 145 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுகுறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் போட்டி கூறியதாவது: ''கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மீது இன்னும் நாங்கள் சிறிது அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். நடுவரிசையில் இறங்கியவர்கள் இன்னும் கூடுதலாக பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும்.

take charge,warner,defeat,t20,opponent ,பொறுப்பேற்கிறேன்,  வார்னர், தோல்வி, டி20, எதிரணி

ஏராளமான டாட் பந்துகளை நடுவரிசையில் உள்ள வீரர்கள் அடிக்காமல் விட்டது வேதனையாக இருக்கிறது. ஏறக்குறைய 36 டாட் பந்துகளை விட்டுள்ளோம். டி20 போட்டியில் இவ்வளவு அதிகமாக டாட் பந்துகளை விடக்கூடாது. சரியான ஸ்கோரை நாம் எடுக்காவிட்டால், எதிரணியின் வெற்றியைத் தடுப்பது கடினமாகிவிடும்.

வெளிப்படையாகக் கூறுகிறேன், என்னுடைய பேட்டிங் மோசமாக இருந்தது. எளிதாக விக்கெட்டை இழந்துவிட்டேன். இதற்கு யாரையும் குறை கூறவில்லை. கேப்டனாக, பொறுப்பாக பேட் செய்யாமல் இருந்ததற்கு நானே பொறுப்பேற்கிறேன். மீண்டும் இங்கு ஒரு போட்டியில் டெல்லி அணியுடன் விளையாடப் போகிறோம். இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.

Tags :
|
|
|