Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வெல்ல விரும்புகிறேன் - வீனஸ் வில்லியம்ஸ்

பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வெல்ல விரும்புகிறேன் - வீனஸ் வில்லியம்ஸ்

By: Karunakaran Wed, 17 June 2020 1:22:36 PM

பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வெல்ல விரும்புகிறேன் - வீனஸ் வில்லியம்ஸ்

அமெரிக்காவின் முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையாக வீனஸ் வில்லியம்ஸ் உள்ளார். இவர் 1994-ம் ஆண்டு டென்னிஸ் களத்தில் அடியெடுத்து வைத்தார். இவர் தற்போது வரை 7 கிராண்ட்ஸ்லாம் பட்டமும், ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு எந்த சர்வதேச பட்டமும் வெல்லவில்லை.

முன்பு இருந்தது போல் அவரது ஆட்டத்திறன் இல்லை. இருப்பினும் அவர் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், இன்று வீனஸ் வில்லியம்ஸ் தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

venus williams,40th birthday,america,tennis player ,வீனஸ் வில்லியம்ஸ்,40-வது பிறந்தநாள்,அமெரிக்கா, டென்னிஸ் வீராங்கனை

இது குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில், ‘எனக்கு எப்போதும் கனவு உண்டு. அதை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறேன். நான் இன்னும் பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வெல்லவில்லை. அதை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்விரு பட்டங்களையும் நெருங்கி வந்து கோட்டை விட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது. உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆனாலும் இன்னும் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க ஆசைப்படுகிறேன். உரிய நேரம் வரும் போது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :