Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால் சிறிது பதட்ட மடைந்தேன் - டேவிட் வார்னர்

நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால் சிறிது பதட்ட மடைந்தேன் - டேவிட் வார்னர்

By: Karunakaran Fri, 09 Oct 2020 4:40:37 PM

நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால் சிறிது பதட்ட மடைந்தேன் - டேவிட் வார்னர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நிக்கோலஸ் பூரன் கடுமையாக போராடினார். அவர் 37 பந்தில் 77 ரன் எடுத்து அவுட் ஆனார்.

6 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 5-வது தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஐதராபாத் 3-வது வெற்றியை பெற்றது. தோல்வி குறித்து பஞ்சாய் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழக்கும் போது அது கடினமாக இருக்கும். குறிப்பாக நாங்கள் 6 பேட்ஸ்மேன்களை மட்டுமே கொண்டு விளையாடியது, மயங்கா அகர்வால் ரன் அவுட் ஆனது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று கூறினார்.

nervous,nicholas pooran,david warner,ipl ,பதட்டம், நிக்கோலஸ் பூரன், டேவிட் வார்னர், ஐ.பி.எல்


மேலும் அவர், நிக்கோலஸ் பூரன் நன்றாக பேட்டிங் செய்தார். கடந்த ஆண்டு அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களது அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். சில நாட்கள் அது நடக்காமல் போய்விடும். அவர்களுடன் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பிரசினைகளை புரிந்து கொள்வார்கள். ஒரு கேப்டனாக அவர்களின் தோல்வியை கைவிட்டு ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

வெற்றி குறித்து ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், இந்த ஆட்டத்தை அனுபவித்து விளையாடினேன். ஆனால் நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால் சிறிது பதட்ட மடைந்தேன். ரஷித்கான் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவரை அணியில் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும், பேர்ஸ்டோவும் இணைந்து விளையாடுவதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே இவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று ஏன் நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

Tags :