Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பார்சிலோனா கிளப்புக்கு எதிராக ஒருபோதும் கோர்ட்டுக்கு செல்ல மாட்டேன் - மெஸ்சி

பார்சிலோனா கிளப்புக்கு எதிராக ஒருபோதும் கோர்ட்டுக்கு செல்ல மாட்டேன் - மெஸ்சி

By: Karunakaran Sun, 06 Sept 2020 6:15:03 PM

பார்சிலோனா கிளப்புக்கு எதிராக ஒருபோதும் கோர்ட்டுக்கு செல்ல மாட்டேன் - மெஸ்சி

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்சி உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆவார். 6 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்ற இவர், ஸ்பெயின் நாட்டில் உள்ள பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். 2000-ம் ஆண்டு தனது 13-வது வயதில் அவர் அந்த கிளப்பில் இளம் வீரராக கால் பதித்த அவரது ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டு வரை உள்ளது.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேற அவர் முடிவு செய்தார். இலவச பரிமாற்றம் அடிப்படையில் தன்னை விடுவிக்கும்படி அவர் பார்சிலோனா கிளப் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார். தற்போது அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக செலுத்தினால் மட்டுமே மெஸ்சியை விடுவிக்க முடியும் என பார்சிலோனா கிளப் நிர்வாகம் அறிவித்து விட்டது. பின்னர், அவரது தந்தை பார்சிலோனா கிளப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

court,barcelona club,messi,football ,நீதிமன்றம், பார்சிலோனா கிளப், மெஸ்ஸி, கால்பந்து

2020-2021 உள்ள ஒரு சீசனில் மெஸ்சி பார்சிலோனா கிளப்புக்காக விளையாடுகிறார். ஆனாலும் அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து மெஸ்சி கூறுகையில், பார்சிலோனா அணியில் நான் மகிழ்ச்சியாக இல்லை. இதனால்தான் அந்த கிளப்பிலிருந்து விலக விரும்பினேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அணித் தலைவர் ஜோசப் மரியாவுடன் இதை தெரிவித்தேன். விருப்பம் இருந்தால் இருக்கலாம். இல்லையென்றால் போகலாம் என்றார். ஆனால் தற்போது அவர் வேறு மாதிரி பேசுகிறார். நானும் வேறு வழியில்லாமல் சட்ட சிக்கல்களை தவிர்க்க பார்சிலோனா அணியில் நீடிக்கிறேன் என்று கூறினார்.

மேலும் அவர், பார்சிலோனா கிளப்புக்கு எதிராக ஒருபோதும் கோர்ட்டுக்கு செல்ல மாட்டேன். ஏனென்றால் இந்த அணியை நான் நேசிக்கிறேன். இங்குதான் என் வாழ்க்கை உருவானது. எனக்கு தேவையான அனைத்தையும் இங்குதான் பெற்றேன் என்று தெரிவித்துள்ளார். 33 வயதான மெஸ்சி பார்சிலோனா அணிக்காக 731 போட்டிகளில் 634 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|