Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இம்ரான் கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார் - பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

இம்ரான் கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார் - பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

By: Karunakaran Tue, 03 Nov 2020 6:29:01 PM

இம்ரான் கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார் - பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் மீது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் கடுமையான குற்றச்சாட்டைவைத்து உள்ளார். சர்பராஸ் நவாஸ் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், இம்ரான் வழக்கமாக கஞ்சா உட்கொண்டு வருவதாகவும், மேலும் கோகைன் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். 1987 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் ஒரு சம்பவத்தின் விவரங்களை நவாஸ் குறிப்பிட்டு கூறி உள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிராக பந்து வீசிய இம்ரானுக்கு சில சிரமங்கள் இருந்தன. பாகிஸ்தானுக்கு திரும்பியதும், இம்ரான் நவாஸின் வீட்டிற்குச் சென்று போதைப்பொருள் உட்கொண்டதாக கூறி உள்ளார். இம்ரானுடன் சலீம் மாலிக், மொஹ்சின் கான், அப்துல் காதிர் ஆகியோரும் இருந்தனர் என கூறியுள்ளார். இதுகுறித்து நவாஸ் கூறுகையில், இம்ரான் கான் கஞ்சாவை உட்கொண்டிருக்கிறார், அவர் லண்டனிலும் என் வீட்டிலும் கூட அதைச் செய்து உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

imran khan,cannabis,former pakistan fast bowler,pakistan ,இம்ரான் கான், கஞ்சா, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், பாகிஸ்தான்

1969 முதல் 1984 வரை - பாகிஸ்தான் அணிக்காக மொத்தம் 55 டெஸ்ட் மற்றும் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சர்ஃபராஸ் பாகிஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். தற்போதைய பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் நவாஸ் மட்டுமல்ல. இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், போதைப்பொருள் உட்கொண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இம்ரான் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும், திருமணமான ஒருவருடன் நேரடி உறவில் இருந்ததாகவும் ரெஹாம் கான் கூறியுள்ளார். ரெஹான் தனது புத்தகத்தில், இம்ரான் ஹெராயின் மற்றும் ரோஹிப்னோல் போன்ற பல தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :