Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி

By: Nagaraj Thu, 22 Sept 2022 7:00:41 PM

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி

புதுடில்லி: இந்திய ஏ அணி வெற்றி... நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வென்றுள்ளது.

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது.

ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து ஏ அணி 40.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

match,team india,new zealand,win,runs ,ஆட்டம், இந்திய அணி, நியூசிலாந்து, வெற்றி, ரன்கள்

மைக்கேல் ரிப்பன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளும் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இந்திய ஏ அணி சிறப்பாக பேட்டிங் செய்து 31.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் 41, திரிபாதி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். சஞ்சு சாம்சன் 29, ரஜத் படிதார் 45 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

Tags :
|
|