Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 100வது டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள்

100வது டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள்

By: Nagaraj Sat, 26 Dec 2020 09:45:19 AM

100வது டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள்

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் 100-ஆவது டெஸ்ட் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 100-ஆவது டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இந்திய மண்ணில் இதுவரை இரு அணிகளும் 50 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில், இந்தியா 21 வெற்றிகளையும், ஆஸ்திரேலியா 13 வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’யில் முடிந்துள்ளது. 15 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

ஆஸ்திரேலிய மண்ணில் 49 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில், ஆஸ்திரேலியா 30 வெற்றிகளையும், இந்தியா 7 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 12 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

india,australia,wicket,100th test match ,இந்தியா, ஆஸ்திரேலியா, விக்கெட், 100வது டெஸ்ட் போட்டி

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1947-ஆம் ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் மோதின. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 115 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது. ஆனால், இந்தியா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சோ்த்தே 156 ரன்கள்தான் எடுத்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டான் பிராட்மேன் 185 ரன்கள் குவித்தாா். அவருடைய தனிப்பட்ட ஸ்கோரைவிட இந்தியாவின் ஸ்கோா் குறைவாகும்.

Tags :
|
|