Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நாளை துவங்குகிறது இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி; எந்த ஜோடி துவக்கம் தருகிறது

நாளை துவங்குகிறது இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி; எந்த ஜோடி துவக்கம் தருகிறது

By: Nagaraj Thu, 26 Nov 2020 4:18:51 PM

நாளை துவங்குகிறது இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி; எந்த ஜோடி துவக்கம் தருகிறது

நாளைய போட்டியில் எந்த ஜோடி துவக்கம் தரும்... ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு எந்த ஜோடி துவக்கம் தரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை சிட்னியில் துவங்குகிறது. இத்தொடரில் இந்திய அணிக்கு புதிய துவக்க ஜோடியை கண்டறிவதில் கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் துணைக் கேப்டன் ரோகித் சர்மா இடம் பெறாத நிலையில் ஷிகர் தவானுடன், லோகேஷ் ராகுல் அல்லது மயங்க் அகர்வால் என இருவரில் யாரை களமிறக்குவது என குழப்பம் காணப்படுகிறது. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் மயங்க் அகர்வால் சிறந்த துவக்கம் தந்தார்.

மறுபக்கம், துவக்க வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல், 2019 உலக கோப்பை தொடருக்குப் பின், இந்திய அணியில் நான்காவது இடத்தில் விளையாடுகிறார். ஒருவேளை ஷிகர் தவான், ராகுல் ஜோடி களமிறங்கினால், 'மிடில் ஆர்டரில்' கேப்டன் கோஹ்லி, அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே இடம் பெறுவர். மயங்க் அகர்வால் இடம் பெறுவது சந்தேகம் தான்.

ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்டு வந்த பின், இதுவரை பந்து வீசவில்லை. இவர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவதால் மயங்க் அகர்வால் இடம் பெற முடியாது. இது அணிக்கு சிக்கல் ஏற்படுத்தும் என்பதால் 'ஆல் ரவுண்டர்' இடத்தை ஜடேஜா தட்டிச் செல்வார்.

bumra,jadeja,starters,coach,prithvi shah ,பும்ரா, ஜடேஜா, துவக்க வீரர்கள், பயிற்சி, பிரித்வி ஷா

இவருடன் சகால் இணைந்து சுழற்பந்து வீச்சை கவனித்துக் கொள்வார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி இடம் பெறுவது உறுதி. மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி என இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம்.

ஒருவேளை நான்கு 'வேகங்களுடன்' களமிறங்குவது என முடிவு செய்யப்பட்டால் ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால் என இருவருக்கும் இடம் கிடைக்காது. இந்திய அணி கடைசியாக இந்த ஆண்டு பிப்., 24ம் தேதி நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இதன் பின் சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் கொரோனா காரணமாக ரத்தானது.

தற்போது 8 மாதங்கள் கழித்து மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளது. முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறகையில், ''ஆஸ்திரேலிய தொடரில் ராகுல் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். ஏனெனில் இவருக்கு சதம் விளாசலாம். இன்னும் சிறப்பாக செயல்பட்டால் இரட்டை சதம் கூட அடிக்கலாம்,'' என்றார்.

சிட்னியில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பும்ரா, ஜடேஜாவைப் போல பந்து வீசி 'காமெடி' செய்தார் பிரித்வி ஷா. ஜடேஜா தன் பங்கிற்கு பும்ரா போல பந்து வீசினார்.

Tags :
|
|
|