Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் நாளிலேயே 3 பதக்கங்களை தட்டி தூக்கிய இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் நாளிலேயே 3 பதக்கங்களை தட்டி தூக்கிய இந்தியா

By: Nagaraj Mon, 25 Sept 2023 1:14:32 PM

ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் நாளிலேயே 3 பதக்கங்களை தட்டி தூக்கிய இந்தியா

சீனா: இந்தியாவுக்கு 3 பதக்கம்... சீனாவில் நடைபெறும் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்க சுற்றுகள் தொடங்கிய முதல் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.

கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் உள்பட மேலும் சில போட்டிகளில் இந்தியா்கள் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நிலையில், இதர சில போட்டிகளில் அந்த சுற்று வாய்ப்பை இழந்தனா்.

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவில் இந்தியாவின் மெஹுலி கோஷ், ரமிதா ஜிண்டால், ஆஷி சோக்சி கூட்டணி 1,886 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றது. சீனா முதலிடம் பிடித்தது.

asia championship,india,3 medals,silver,bronze ,ஆசியா போட்டி, இந்தியா, 3 பதக்கம், வெள்ளி, வெண்கலம்

அதிலேயே தனிநபா் பிரிவில் ரமிதா ஜிண்டால் 230.1 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். சீனாவுக்கு தங்கம், வெண்கலம் கிடைத்தது. மற்றொரு இந்தியரான மெஹுலி கோஷ் 208 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தாா்.

ரோயிங் எனப்படும் துடுப்புப் படகு விளையாட்டில் ஆடவருக்கான லைட்வெயிட் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் இணை 6 நிமிஷம் 28.18 விநாடிகளில் பந்தய இலக்கை 2-ஆவதாக எட்டியது. சீனா, உஸ்பெகிஸ்தான் முறையே தங்கம், வெண்கலம் வென்றன.

ஆண்கள் கோக்ஸ்டு 8 நபா் பிரிவில் இந்தியாவின் நீரஜ், நரேஸ்க் கல்வனியா, நிதீஷ் குமாா், சரன்ஜீத் சிங், ஜஸ்விந்தா் சிங், பீம் சிங், புனீத் குமாா், ஆஷிஷ் ஆகியோா் அடங்கிய அணி 5 நிமிஷம் 43.01 விநாடிகளில் வந்து வெள்ளி பெற்றது. சீனாவுக்கு தங்கமும், இந்தோனேசியாவுக்கு வெண்கலமும் கிடைத்தது.

3-ஆவதாக காக்ஸ்லெஸ் ஜோடி பிரிவில் இந்தியாவின் பாபுலால் யாதவ், லேக் ராம் இணை 6 நிமிஷம் 50.41 விநாடிகளில் 3-ஆவதாக இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் பெற்றது. ஹாங்காங், உஸ்பெகிஸ்தான் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தன.

Tags :
|
|