Advertisement

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு

By: Nagaraj Thu, 10 Dec 2020 10:32:17 PM

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு

இந்தியா- இங்கிலாந்து தொடருக்கான அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நான்கு டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமான இந்த தொடர் சென்னை, அகமதாபாத், புனே ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே நடக்கிறது.

announcement,cricket series,india,england ,அறிவிப்பு, கிரிக்கெட் தொடர், இந்தியா, இங்கிலாந்து

இதில் முதலில் நடைபெறும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முறையே பிப்ரவரி 5- மற்றும் 13-ந் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. அதன்பிறகு 3-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24-ல் பகல்-இரவு ஆட்டமாகவும், 4-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 4-ந் தேதியும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானமாக மொதேரா மைதானத்தில் நடக்கிறது.

தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மார்ச் 12-ந்தேதியும், 2-வது போட்டி மார்ச் 14, 3-வது போட்டி மார்ச் 16, 4-வது போட்டி மார்ச் 18, ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மார்ச் 20-ந்தேதியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேயில் மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி மார்ச் 26-ந்தேதியும், 3-வது போட்டி 28-ந்தேதியும் நடக்கிறது.

Tags :
|