Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • காமன்வெல்த் போட்டியில் மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது இந்தியா

காமன்வெல்த் போட்டியில் மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது இந்தியா

By: Nagaraj Sun, 07 Aug 2022 7:46:47 PM

காமன்வெல்த் போட்டியில் மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது இந்தியா

பர்மிங்காம்: மேலும் 2 தங்கப்பதக்கம்... காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று மேலும் இரண்டு தங்க பதக்கம் கிடைத்தது.

அதேபோல் டிரிபிள் ஜம்ப் போட்டியிலும் ஒரு தங்கம் கிடைத்தது.பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.அதில், குறைந்த எடை கொண்ட பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் நீத்து கங்காஸ், பிரிட்டனின் ரெஸ்டனை எதிர்கொண்டார். அதில் ரெஸ்டனை 0-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி நீத்து கங்காஸ் தங்கம் வென்றார்.

அதேபோல் ஆண்கள் பிரிவு 48- 51 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டையில், இந்தியாவின் அமித் பங்கால், பிரிட்டனின் கியாரன் மெக்டொனால்டை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

gold medal,congratulations,prime minister modi,president,gold medal,commonwealth ,
தங்கப்பதக்கம், வாழ்த்து, பிரதமர் மோடி, ஜனாதிபதி, தங்கப்பதக்கம், காமன்வெல்த்

பெண்கள் பிரிவு ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. அதில் 2- 0 என்ற கோல்கணக்கில் வெற்றிப்பெற்ற இந்திய அணி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. டிரிபிள் ஜம்ப்டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

அதேபோட்டியில் இந்தியாவின் மற்றொரு வீரர் அப்துல்லா அபுபக்கர் வெள்ளி வென்றார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்றார். இந்தியாவின் சந்தீப் குமார் 10 மீ., ரேஸ் வாக்கில் வெண்கலம் வென்றார்.சிந்துவுக்கு பதக்கம் உறுதி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை தோற்கடித்தார்.


இதற்கடுத்து அவர் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் ஹாக்கிஅணியினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags :