Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பெருமையை பெற்ற இந்திய வீரர்

ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பெருமையை பெற்ற இந்திய வீரர்

By: Karunakaran Fri, 06 Nov 2020 6:31:12 PM

ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பெருமையை பெற்ற இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ளார். தற்போது இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேர்த்தியான யார்க்கர், திடீர் பவுன்சர், ஸ்லோவர் ஒன் என விதவிதமான பந்துகளை வீசி பும்ரா பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர் ஆவார்.

இந்நிலையில், பும்ரா இந்த ஐபிஎல் தொடரில் விக்கெட்டை அதிக அளவில் வீழ்த்தினார். 14 போட்டிகள் கொண்ட லீக் ஆட்டம் முடிவில் 23 விக்கெட் வீழ்த்தினார். நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான குவாலிபையர் 1-ல் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

indian batsman,most wickets,ipl season,ipl2020 ,இந்திய பேட்ஸ்மேன், அதிக விக்கெட்டுகள், ஐபிஎல் சீசன், ஐபிஎல் 2020

இந்த நான்கு விக்கெட் மூலம் இதுவரை 27 விக்கெட் வீழ்த்தி ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். புவனேஷ்வர் குமார் 2017-ல் 26 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 2013-ல் 24 விக்கெட்டுகளும், உனத்கட் 2017-ல் 24 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற குவாலிபையர் ஆட்டத்தில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. மும்பை அணி பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால், டெல்லி அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :