Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

By: Karunakaran Fri, 27 Nov 2020 2:00:35 PM

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று தொடங்கியது. மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய பிறகு இந்திய அணி களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

ஸ்டேடியத்தில் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும். இந்திய அணியில் காயத்தால் ரோகித் சர்மா இடம் பெறாதது பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது. கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்தியாவின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள்.

india,bowling,one-day cricket match,australia ,இந்தியா, பந்துவீச்சு, ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியா

ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டும் விராட் கோலி இந்த தொடருக்குள் 133 ரன்கள் எடுத்தால் 12 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சிறப்பை பெறுவார். பந்து வீச்சில் பும்ரா, ஷமி, ஜடேஜா, சாஹல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். உள்ளூர் சூழல் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான அம்சமாகும்.

இந்திய அணி இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் சிட்னியில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பந்து வீசுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Tags :
|