Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

By: Karunakaran Sun, 06 Dec 2020 4:13:01 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சிட்னி நகரில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

india,bowling,second 20 over match,australia ,இந்தியா, பந்துவீச்சு, இரண்டாவது 20 ஓவர் போட்டி, ஆஸ்திரேலியா

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் :
இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், தீபக் சாஹர், டி.நடராஜன்.

ஆஸ்திரேலியா: மேத்யூ வேட் (கேப்டன்), டார்சி ஷார்ட், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், சீன் அப்போட், ஆடம் ஜம்பா, ஸ்வெப்சன் அல்லது நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட்.

சிட்னி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இந்த மைதானத்தில் இதுவரை ஏழு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் 4-ல் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இரு ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இரு தோல்விகளும் இந்தியாவுக்கு எதிராக நிகழ்ந்தவை ஆகும். 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 221 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

Tags :
|