Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

By: Karunakaran Fri, 17 July 2020 2:02:08 PM

ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய அணி எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்துகின்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில், இந்திய அணிக்குரிய இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், அந்த போட்டிகளை வேறுதேதியில் நடத்துவது குறித்தும், இந்திய அணியின் வருங்கால போட்டி அட்டவணை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

indian cricket board,ipl,local cricket matches,ganguly ,இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல்., உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், கங்குலி

ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, சையத் முஸ்தாக் அலி கோப்பை மற்றும் ஜூனியர் அளவிலான போட்டிகளை உள்நாட்டில் எப்போது தொடங்கலாம் எனவும் ஆலோசிக்கப்படுகிறது. இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மத்திய அரசிடம் இருந்து வரி விலக்கு பெற்றுத் தர ஐ.சி.சி. கெடு விதித்துள்ளதால், அதுகுறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை எப்போது நடத்துவது, இந்தியாவில் நிலைமை சீராகாவிட்டால் அதை வெளிநாட்டிற்கு மாற்றலாமா? என கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்கவுள்ளது. இந்திய அணியின் சீருடைக்கான ஸ்பான்சர்ஷிப் பெற்றிருந்த நைக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் புதிதாக டெண்டர் கோருவது குறித்தும், கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிப்பதற்கான பணிகளை தொடங்குவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

Tags :
|