Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஜிம்பாப்வேவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜிம்பாப்வேவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்திய கிரிக்கெட் அணி

By: Nagaraj Sun, 06 Nov 2022 8:43:44 PM

ஜிம்பாப்வேவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியா: அரையிறுதியில் நுழைந்தது இந்தியா... ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா..

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு சென்று விட்டது.

இந்நிலையில் சூப்பர் 12 ன் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப் 2வில் முதலிடம் பிடித்து அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும். ஒருவேளை தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.


இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 61 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

india,semi-final,win,top,england team ,இந்தியா, அரையிறுதி, வெற்றி, முதலிடம், இங்கிலாந்து அணி

மேலும் கே.எல் ராகுல் 35 பந்துகளில் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்) 51 ரன்களும், விராட் கோலி 26 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளும், நகர்வா, முசரபானி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் சிக்கந்தர் ராசா மற்றும் ரியான் பர்ல் இருவர் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். மற்றபடி அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியில் 17.2 ஓவரில் ஜிம்பாப்வே அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் குரூப் 2 பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி. எனவே அரையிறுதியில் வரும் 10ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

Tags :
|
|
|