Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னரை பாராட்டி தள்ளும் இந்திய ரசிகர்கள்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னரை பாராட்டி தள்ளும் இந்திய ரசிகர்கள்

By: Nagaraj Sat, 28 Nov 2020 08:47:43 AM

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னரை பாராட்டி தள்ளும் இந்திய ரசிகர்கள்

வார்னருக்கு குவியும் பாராட்டுக்கள்... ஆஸ்திரேலியா- இந்தியா முதலாவது ஒருநாள் போட்டியில் வார்னர் செய்த செயல்தான் தற்போது பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது. இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

warner,video,internet,fans,compliments ,வார்னர், வீடியோ, இணையம், ரசிகர்கள், பாராட்டு

இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரரான வார்னர் செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக இந்திய ரசிகர்கள் அவர்மீது அளவில்லாத அன்பை வெளிப்படுத்தி தான் வருகின்றனர். ஏனென்றால் அந்த அளவிற்கு வார்னர் ஐபிஎல் தொடரில் இந்தியாவில் விளையாடும் போதும் சரி மற்ற நேரங்களிலும் சரி இந்திய ரசிகர்கள் அன்பையும் பெறும் படி அவரது செயல்களை வெளிப்படுத்துவார்.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் பாண்டியா விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருடைய ஷு லேஸ் அவிழ்ந்து விட்டது. உடனே கவர் திசையில் நின்ற அவர் அதனை கவனித்து அவரிடம் சென்று அவிழ்ந்த ஷூ லேசை கட்டிவிட்டார். இதனைக் கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் இந்திய ரசிகர்கள் இதனை வீடியோவாக இணையத்தில் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வார்னருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

Tags :
|
|
|