Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கபடி பைனலில் இந்திய ஆண்கள் அணி திரில் வெற்றி: தங்கத்தை தட்டி தூக்கிய தங்கங்கள்

கபடி பைனலில் இந்திய ஆண்கள் அணி திரில் வெற்றி: தங்கத்தை தட்டி தூக்கிய தங்கங்கள்

By: Nagaraj Mon, 09 Oct 2023 07:17:17 AM

கபடி பைனலில் இந்திய ஆண்கள் அணி திரில் வெற்றி: தங்கத்தை தட்டி தூக்கிய தங்கங்கள்

ஹாங்சு: இந்திய ஆண்கள் கபாடி அணியின் திரில் வெற்றி... பதட்டமான ஆசிய விளையாட்டு கபடி பைனலில் இந்திய ஆண்கள் அணி 'திரில்' வெற்றி பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றியது.

பெண்கள் அணியும் தங்கம் வென்றது.ஆசிய விளையாட்டு கபடியில் நேற்று பைனல் நடந்தது. இந்திய அணி, வலிமையான ஈரானை சந்தித்தது. துவக்கத்தில் இந்தியா 6-10 என பின்தங்கியது. பின் சுதாரித்த இந்திய அணி முதல்பாதியின் கடைசி நேரத்தில் ஈரானை முதன் முறையாக 'ஆல் அவுட்டாக்க, 17-13 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 24-19 என இருந்தது.

பின் அடுத்தடுத்து ஈரான் புள்ளிகளை பெற, ஸ்கோர் 25-25 என சமன் ஆனது. மீண்டும் இந்தியா 28-25 என முந்தியது. கடைசி நேரத்தில் ஈரான் அணியினர், இந்திய வீரர்களை மடக்க, ஸ்கோர் 28-28 என ஆனது.'டூ ஆர் டை'போட்டி முடிய ஒன்றரை நிமிடம் இருந்த போது 'டூ ஆர் டை' என்ற கட்டாயத்தில் 'ரெய்டு' சென்றார் கேப்டன் பவான். பவான் 'டச்' செய்யும் முன்பாக ஈரான் வீரர் ஒருவர் எல்லைக் கோட்டை மிதித்து அவுட்டானார்.

gold,knocked out,iran,team india,tournament ,தங்கம், தட்டிச் சென்றது, ஈரான், இந்திய அணி வீரர்கள், போட்டி

அதேநேரம் வேகமாக தொடுவது போலச் சென்று, தந்திரமாக 'லாபி லைனுக்கு' சென்றார் பவான்.இவரது வலையில் கச்சிதமாக விழுந்த ஈரான் வீரர்கள் பவானை தொட்டு வெளியே தள்ளினர். இதைப் பார்த்த 'ரெப்ரி', இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கினார். ஆனால் 'லாபிக்கு' சென்ற தன்னை, 4 ஈரானிய வீரர்கள் தொட்டதால், சர்வதேச விதிப்படி இந்தியாவுக்கு 4 புள்ளி வேண்டும் என பவான், 'ரிவியூ' கேட்டார்.

நீண்ட ஆலோசனைக்குப் பின், கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்தியாவுக்கு 4, ஈரானுக்கு 1 புள்ளி தரப்பட்டது. மறுபக்கம் ஈரான் அணியினர் இதை எதிர்த்து மீண்டும் 'ரிவியூ' செய்ய, 'டிவி' அம்பயர், 'ரெப்ரி', 'மேட்ச் ரெப்ரி' என பலரும் மாறி, மாறி 'ரீப்ளே' பார்த்து ஆலோசிக்க, 'டென்ஷன்' எகிறியது.கடைசியில் தீர்ப்பு மாற்றப்பட்டு 1-1 என புள்ளி வழங்கப்பட்டது.

இதைப் பார்த்து ஆவேசமான இந்திய பயிற்சியாளர், வீரர்களை களத்தில் அமரச்செய்து எதிர்ப்பு தெரிவித்தார். வேறு வழியில்லாத நிலையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின், சர்வதேச கபடி விதிப்படி, இந்தியாவுக்கு 3, ஈரானுக்கு 1 என புள்ளி தரப்பட்டு (31-29), போட்டி துவங்கியது. முடிவில் இந்தியா 33-29 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் தட்டிச் சென்றது.

Tags :
|
|