Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆசிய கபடி போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி தங்கத்தை வென்ற இந்திய அணி

ஆசிய கபடி போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி தங்கத்தை வென்ற இந்திய அணி

By: Nagaraj Mon, 03 July 2023 00:00:32 AM

ஆசிய கபடி போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி தங்கத்தை வென்ற இந்திய அணி

புதுடெல்லி: ஆசிய கபடி போட்டியில் ஈரான் அணியை இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 தொடர் தென்கொரியாவின் பூசனில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஈரானும், முன்னாள் சாம்பியன் இந்தியாவும் மோதின.

asian kabaddi championship,gold winning indian team,warm-welcome, ,ஆசிய கபடி சாம்பியன்ஷிப், உற்சாக வரவேற்பு, தங்கம் வென்ற இந்திய அணி

பரபரப்பான ஆட்டத்தில் 42-32 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்த தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்திய அணி ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையை 8-வது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்நிலையில், ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று இந்திய அணி இன்று டெல்லி திரும்பியது. இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags :