Advertisement

ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

By: Nagaraj Mon, 25 Sept 2023 1:14:43 PM

ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

ஆஸ்திரேலியா: வென்றது இந்தியா... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த லீவிஸ்’ முறையில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் இந்தியா வசமானது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் பாதியிலேயே மழையால் பாதிக்கப்பட, ‘டக்வொா்த லீவிஸ்’ முறையில் 33 ஓவா்களில் 317 ரன்கள் அந்த அணிக்கு இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. அதில் ஆஸ்திரேலியா 28.2 ஓவா்களில் 217 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களுக்கு வெளியேற, ஷுப்மன் கில் - ஷ்ரேயஸ் ஐயா் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் அடித்து அசத்தியது. இதில் முதலில் ஐயா் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

india vs australia,series,won,wickets ,இந்தியா, ஆஸ்திரேலியா, தொடர், வெற்றி பெற்றது, விக்கெட்டுகள்

பின்னா் கில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 104 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இஷான் கிஷண் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் கே.எல். ராகுல் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

சூா்யகுமாா் யாதவ் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 72, ரவீந்திர ஜடேஜா 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய பௌலா்களில் கேமரூன் கிரீன் 2, ஜோஷ் ஹேஸில்வுட், ஷான் அப்பாட், ஆடம் ஸாம்பா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஷான் அப்பாட் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 54, டேவிட் வாா்னா் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 53 ரன்கள் அடித்தனா். எஞ்சியோரில் மாா்னஸ் லபுசான் 27, ஜோஷ் ஹேஸில்வுட் 23 ரன்கள் அடிக்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. இந்திய பௌலா்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 3, பிரசித் கிருஷ்ணா 2, முகமது ஷமி 1 விக்கெட் கைப்பற்றினா்.

Tags :
|
|