Advertisement

காயம் பெரிய அளவில்தான் உள்ளதாம் ரோஹித் சர்மாவுக்கு

By: Nagaraj Fri, 30 Oct 2020 8:10:55 PM

காயம் பெரிய அளவில்தான் உள்ளதாம் ரோஹித் சர்மாவுக்கு

ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போதைய இந்திய அணியில் மிகவும் புகழ் பெற்ற வீரர்களில் மிக முக்கியமான வீரர் ரோஹித் ஷர்மா. மூன்று விதமான தொடர்களிலும் இடம்பெறும் வீரர்களில் ஒருவர். ஆனால் ஐபிஎல் போட்டிகளுக்கு அடுத்தபடியாக நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்று விதமான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்படவில்லை,

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் இந்திய ஜாம்பவான்கள் கூட, ரோஹித் சர்மாவை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதற்கான காரணத்தை பிசிசிஐ வெளிப்படையாகக் கூறவில்லை என அதிருப்தியாக பேசினார்கள்.

mumbai team,rohit sharma,indian players,pollard ,மும்பை அணி, ரோஹித் சர்மா, இந்தியவீரர்கள், பொல்லார்ட்

இந்திய அணி அறிவிக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ரோஹித் மும்பை அணிக்காக பயிற்சி செய்யும் போட்டோ வெளியானதையடுத்து ரோஹித் சர்மா வேண்டுமென்றே ஆஸ்திரேலியா தொடரில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்தது.

இந்நிலையில் அவருக்கு உண்மையாக என்ன ஆனது என தெரியவந்துள்ளது. ரோஹித் காயம் நாம் எதிர்பார்த்தது போல் சாதாரணமானது அல்ல, மோசமானது என தகவல் வெளியாகியுள்ளது. அவர் பயிற்சி செய்வது போல மும்பை அணி வெளியிட்ட போட்டோவில் அவரது காயத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக இல்லை. ஆனால் அவருக்கு கிரேடு 1 காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பயிற்சி செய்தால் காயம் தீவிரமாகுமே தவிர, குணமடையாது.

இந்த காயம் குணமடைய 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும். கிரேடு 2 காயமென்றால் 8 வாரங்கள் வரை தேவைப்படும். சாதாரண காயம் என்றால் 10 நாட்களில் சரியாகலாம். ஆனால் ரோஹித் காயம் தீவிரமானது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் ரோஹித் வெளியில் தான் இருப்பார், வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பார் என தெரிகிறது.

காயம்பட்டவர் சிகிச்சைக்கு செல்லாமல் அணியில் ஏன் இருக்கிறார் என கேள்வி எழுவது இயல்பு தான். மும்பை அணியின் கேப்டன் ரோஹித்க்காக மும்பை அணிக்கு உள்ள ரசிகர்களை மும்பை அணி இழக்க விரும்பவில்லை. அதன் காரணமாகவே அவரை அணியினருடன் தங்க வைத்திருக்கிறார்கள். பொல்லார்டை தற்காலிக கேப்டனாக ஏற்றுக்கொள்வார்களே தவிர கேப்டனாக நியமிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லை.

மும்பை அணியில் வேறு இந்திய வீரர்களும் கேப்டனுக்கான தகுதியுடன் இல்லை என்பதும் ரோஹித் அணியுடன் இருப்பதற்கு காரணம் ஆகும்.

Tags :