Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் கிரிக்கெட் மிட் சீசன் டிரான்ஸ்பர் மூலம் ஒரு அணியில் இருந்து மாற முடியும்

ஐபிஎல் கிரிக்கெட் மிட் சீசன் டிரான்ஸ்பர் மூலம் ஒரு அணியில் இருந்து மாற முடியும்

By: Karunakaran Fri, 09 Oct 2020 4:48:33 PM

ஐபிஎல் கிரிக்கெட் மிட் சீசன் டிரான்ஸ்பர் மூலம் ஒரு அணியில் இருந்து மாற முடியும்

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. 8 அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு அணிகளும் 5 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். ஒவ்வொரு அணிகளும் 7 போட்டிகள் விளையாடியதும் தொடரின் பாதியை கடக்கும்.

அப்போது ஆடும் லெவனில் இடம் பிடிக்க முடியாமல் வெளியில் இருக்கும் வீரர்கள் ஒரு அணியில் இருந்து மற்ற அணிகளுக்கு செல்ல மிட் சீசன் டிரான்ஸ்பர் முறை கொண்டு வரப்பட்டது. மிட் சீசன் டிரான்ஸ்பரில் ஒரு அணியில் இரண்டு போட்டிகளுக்கு மேல் விளையாடாத வீரரை மற்ற அணிகள் இரு அணிகளுக்கு இடையில் ஒப்பந்தம் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

ipl cricket,transfer,one team,mid-season transfer ,ஐபிஎல் கிரிக்கெட், பரிமாற்றம், ஒரு அணி, இடைக்கால பரிமாற்றம்

கடந்த ஐபிஎல் சீசனில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த முறை பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த முறையாவது வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் 13 வீரர்கள் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 9 வீரர்கள் உள்ளனர்.

டெல்லி அணியில் ரகானே, கீமோ பால், அலெக்ஸ் கேரி உள்பட 11 பேர் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் 13 பேர் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 10 பேர் உள்ளனர். ராஜஸ்தான் அணியில் 12 பேர் உள்ளனர். ஆர்சிபி அணியில் 10 பேர் உள்ளனர்.

Tags :