Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் அட்டவணை வெளியீடு; ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Sun, 06 Sept 2020 7:18:19 PM

ஐ.பி.எல். கிரிக்கெட் அட்டவணை வெளியீடு; ரசிகர்கள் உற்சாகம்

ஐ.பி.எல். கிரிக்கெட் அட்டவணை வெளியீடு... நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 19-ம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ipl schedule,fans,excitement,mumbai,chennai team ,ஐபிஎல் அட்டவணை, ரசிகர்கள், உற்சாகம், மும்பை, சென்னை அணி

இந்த நிலையில், போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags :
|
|