Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புகிறேன் - சச்சின் தெண்டுல்கர்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புகிறேன் - சச்சின் தெண்டுல்கர்

By: Karunakaran Mon, 21 Sept 2020 2:53:32 PM

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புகிறேன் - சச்சின் தெண்டுல்கர்

13வது ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 8 அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என பலரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

பலரும் ஐபிஎல் கோப்பையை வெல்ல போவது எந்த அணி என கணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

ipl,mumbai indians,trophy,sachin tendulkar ,ஐ.பி.எல்., மும்பை இந்தியன்ஸ், கோப்பை, சச்சின் டெண்டுல்கர்

இதுகுறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன். போட்டி எங்கு நடந்தாலும் எப்போதும் எனது ஆதரவு மும்பை அணிக்கு உண்டு. மும்பை மற்றும் இந்தியன்ஸ் ஒன்றிணையும் போது அது மும்பை இந்தியன்ஸ் ஆகிறது என்று கூறியுள்ளார்.

நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவர் முறையில் டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் பெங்களூரு -ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

Tags :
|
|