Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை அணிகள் பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை அணிகள் பலப்பரீட்சை

By: Karunakaran Wed, 23 Sept 2020 2:37:17 PM

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை அணிகள் பலப்பரீட்சை

13 வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது. இதனால் தற்போது அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் களம் காணுவதால் இந்த முறை ஆடுகளத்தன்மையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப ஆடுவதற்கு முயற்சிப்பார்கள். தற்போது, பந்து வீச்சு, பேட்டிங்கில் வலுவான அணியாகவே மும்பை அணி தென்படுகிறது.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் மோர்கன், எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறன்படைத்த புயல்வேக வீரர் ஆந்த்ரே ரஸ்செல், சுழலில் மிரட்டும் சுனில் நரின், குல்தீப், ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா என்று நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருப்பதால் நம்பிக்கையோடு சவாலை தொடங்குகிறது.

ipl,kolkata,mumbai teams,match ,ஐ.பி.எல்., கொல்கத்தா, மும்பை அணிகள், போட்டி

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம். சுப்மான் கில்லும், சுனில் நரினும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள் என்று நேற்று தெரிவித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், சுப்மான் கில் தரம் வாய்ந்த வீரர். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. எதிர்பார்ப்பையும் தாண்டி அவர் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், பல்வேறு விதங்களில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பது எங்களது பலமாகும். இந்தியாவைச் சேர்ந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களான ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, சந்தீப் வாரியர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று கூறினார்.

Tags :
|