Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை

By: Karunakaran Tue, 10 Nov 2020 07:16:39 AM

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை

8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. மற்ற அணிகள் வெளியேறின. துபாயில் கடந்த 5-ந் தேதி நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அபுதாபியில் 6-ந் தேதி நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

ipl 2020,mumbai indians,delhi capitals,final match ,ஐபிஎல் 2020, மும்பை இந்தியன்ஸ், டெல்லி தலைநகரங்கள், இறுதிப் போட்டி

இந்நிலையில் ஐ.பி.எல். மகுடத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று இரவு அரங்கேறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன. இந்த சீசனில் 9 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பையின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக விளங்குகிறது.

8 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணி தொடரின் தொடக்கத்தில் வீறு நடைபோட்டது. ஆனால் தற்போது சற்று தடுமாறுகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான் முதுகெலும்பாக விளங்கி வருகிறார். மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆட்டத்தில் பிரித்வி ஷா கழற்றி விடப்பட்டார். அவருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ஐதராபாத் அணிக்கு எதிரான தகுதி சுற்றில் பழைய பார்முக்கு திரும்பி பெற்ற வெற்றி டெல்லி அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்து இருக்கும்.

அதிக முறை கோப்பையை வென்று இருக்கும் மும்பை அணி 5-வது முறையாக மகுடம் சூடி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா? அல்லது முதல்முறையாக கோப்பையை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டெல்லி அணி சரித்திரம் படைக் குமா? என்பது இன்று தெரிய வரும்.

Tags :