Advertisement

ஐ.பி.எல். கோப்பையை ஐந்தாவது முறையாக தன் வசமாக்கியது மும்பை

By: Nagaraj Wed, 11 Nov 2020 12:07:51 PM

ஐ.பி.எல். கோப்பையை ஐந்தாவது முறையாக தன் வசமாக்கியது மும்பை

மும்பை இந்தியன் அணி அபார வெற்றி... 2020-ம் ஆண்டுக்கான 13-வது ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை 5-வது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாகும் கைப்பற்றி நடப்பு சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

ரோஹித் சர்மாவின் 'மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்', டிரன்ட் போல்ட்டின் மிரட்டல் பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

mumbai team,5th time,2nd time in a row,record ,மும்பை அணி, 5வது முறை, தொடர்ந்து 2வது முறை, சாதனை

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 2-வது அணி எனும் பெருமையைப் பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டதில் அதாவது தொடர்ந்து 2 முறை பட்டம் வென்ற பெருமை சிஎஸ்கே அணி மட்டும் இருந்தது. அந்தப் பெருமை இனிமேல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சாரும்.

ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.10 கோடி பரிசும் ,2-வது இடம் பிடித்த டெல்லி அணிக்கு ரூ.6.25 கோடி பரிசும் வழங்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலும், ஒட்டுமொத்தத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது.

இதில் சிறப்பு என்னவென்றால், ரோஹித் சர்மா ஒரு வீரராக சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றும், கேப்டனாக 5 சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ரோஹித் சர்மா இடம் பெற்றிருந்தார்.

Tags :