Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா பரிசோதனைக்கு ரூ.10 கோடி செலவாம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா பரிசோதனைக்கு ரூ.10 கோடி செலவாம்

By: Nagaraj Thu, 03 Sept 2020 10:14:14 AM

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா பரிசோதனைக்கு ரூ.10 கோடி செலவாம்

கொரோனா பரிசோதனைக்காக ரூ.10 கோடி செலவு செய்யப்பட்ட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது மார்ச் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது, இந்தநிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டியில் பங்குபெறவுள்ள 8 அணிகளின் வீரர்கள் துபாயில் உள்ள மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் இவர்களுடன் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தமாக 9 பேர் அமீரகம் சென்று உள்ளனர்.

ipl,corona,testing,health officials ,ஐ.பி.எல்., கொரோனா, பரிசோதனை, சுகாதார அதிகாரிகள்

அதாவது இந்திய ஊக்கமருந்து தடுப்பு முகமை அமைப்பு ஐபிஎல் போட்டியின் போதும் அதற்கு முன்னரும் என பல முறை ஊக்கமருந்து சோதனை செய்யவுள்ளது. அதாவது இந்த சோதனையில் மொத்தமாக 50 வீரர்களுக்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 20 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகளை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மையத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் வீரர்களின் கொரோனா பரிசோதனைக்காக 10 கோடி ரூபாய் செலவழிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைப் பணியில் 75 சுகாதார அதிகாரிகள் பணிபுரிய உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tags :
|
|