Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் - வெய்ன் பிராவோ பதில்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் - வெய்ன் பிராவோ பதில்

By: Karunakaran Wed, 26 Aug 2020 2:36:18 PM

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் - வெய்ன் பிராவோ பதில்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். தற்போது கரிபியன் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் கண்டுள்ள வெய்ன் பிராவோ பேட்டி அளித்தபோது, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எல்லா அணிகளுமே சென்னை சூப்பர் கிங்சுக்கு சவாலானவை தான். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் தான் சென்னை அணிக்கு எப்போதும் கடினமான அணியாக இருந்து வருவதாக கூறினார்.

ஐ.பி.எல். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் எப்படிப்பட்ட கடினமான எதிரணி என்பது தெரியும். ஆனால் ஐ.பி.எல்.-ல் எல்லா அணிகளும் சிறந்தவை தான். அனைத்து அணிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் மதிக்கிறது. இதே போல் மற்ற அணிகளும் சென்னை அணி மீது மதிப்பும், மரியாதையும் வைத்து உள்ளதாக அவர் கூறினார்.

ipl,cricket team,win,wayne bravo ,ஐ.பி.எல், கிரிக்கெட் அணி, வெற்றி, வெய்ன் பிராவோ

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 50-60 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவோம். ஆனால் இப்போது அதற்கு சாத்தியமில்லை. ரசிகர்கள் இல்லாவிட்டாலும் தீவிரத்தன்மையும், கிரிக்கெட் ஆட்டத்தின் தரமும் உயர்ந்த நிலையிலேயே இருக்கும் என்று நினைக்கிறேன். உலகம் முழுவதும் டி.வி. மூலம் இந்த போட்டியை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள் என வெய்ன் பிராவோ கூறினார்.

மேலும் அவர், இது கடும் போட்டியும், சவாலும் நிறைந்த தொடர். எந்த அணியாலும் ஜெயிக்க முடியும். உலக அளவில் கொரோனாவின் தாக்கமும், பயணக்கட்டுப்பாடுகளும் இன்னும் நீடிப்பதால் எதையும் திட்டமிட முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு நாளாக விளையாடுவது மட்டுமே இப்போது நிஜம் என்று கூறினார்.

Tags :
|
|